Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அவசர காலத்தில் அணு ஆயுதங்களை அனுமதிக்க ஜப்பான் பரிசீலனை

அவசர காலத்தில் அணு ஆயுதங்களை அனுமதிக்க ஜப்பான் பரிசீலனை

அணு ஆயுதங்களுக்கு எதிரான மூன்று அடிப்படைக் கொள்கைகளையும் மாற்றாமல் தொடர அரசு விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும் WhatsApp Facebook

அவசர காலங்களில் வெளிநாட்டு அணு ஆயுதங்களைத் தனது நாட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்கும் வகையில், தேசிய பாதுகாப்புக் கொள்கையில் விதிவிலக்கு அளிப்பது குறித்து ஜப்பான் அரசு பரிசீலித்து வருகிறது.

ஜப்பானின் தேசிய பாதுகாப்பு உத்தியைத் திருத்தியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருத்தப்பட்ட கொள்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் இறுதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

ஜப்பான் நீண்டகாலமாக மூன்று அணு ஆயுத எதிர்ப்புக் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. அதன்படி, அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது, தயாரிக்கக் கூடாது, வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்பவை அடிப்படை விதிகளாக உள்ளன.

இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அவசர சூழ்நிலைகளில் அணு ஆயுதங்களை நாட்டுக்குள் கொண்டுவர விதிவிலக்கு அளிக்கும் யோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எனினும், அணு ஆயுதங்களுக்கு எதிரான மூன்று அடிப்படைக் கொள்கைகளையும் மாற்றாமல் தொடர அரசு விரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய தேசிய பாதுகாப்பு உத்தியில் இந்த மூன்று கொள்கைகளும் மாற்றமின்றி தொடரும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு உத்தியில் அவசரகால விதிவிலக்கைச் சேர்ப்பது முன்னுரிமை வாய்ந்த யோசனையாக உருவெடுத்துள்ளதாக, அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுகுறித்து ஜப்பான் அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

முந்தைய செய்தி
பத்திரப் பதிவை எளிதாக்க மாதிரி பதிவு மையங்கள்
அடுத்த செய்தி
1.87 கோடி வேட்டி, சேலைகள் தமிழகத்திலேயே தயாரிப்பு: அமைச்சர்

தொடர்புடைய செய்திகள்